கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!
X

சென்னை உயர்நீதிமன்றம்.

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் 11ம் தேதி வரை விசாரிக்கப்படுகிறது.

கோடை வெயில் காரணமாக மே மாதம் உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனாலும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கி வந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக காணொலி வாயிலாக பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று ஜூன் 1 அன்று நீதிமன்றம் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக முழு அளவில் வழக்கு விசாரணை தற்போது நடக்காது என்று தெரிகிறது.

வருகிற 11ம் தேதி வரை, முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!