அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இணையதள முகவரி, அமைச்சர் வெளியிட்டார்
உயர்கல்வித்துறை அசைமச்சர் க.பொன்முடி சென்னையில் பேட்டி அளித்தார்.
சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-2022 கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான https://tngptc.in/ என்ற இணையத்தளவழியைஉயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
மேலும், மூலம் இன்று துவங்கிய ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் இணையதள சேவை துவங்கப்பட்டது.
இதனை அடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, கொரோனா தொற்று பரவி வரும் காலத்தில் மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வந்து விண்ணப்பிக்காமல் இருக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க புதிய இணைய வழியை துவக்கி இருப்பதாகவும்,
மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் விதமாக அந்த தந்த பாலிடெக்னின் கல்லூரிகளில் வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள 18,120 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 11 ஆம் வகுப்பில் சேர என்ன தகுதியோ அதே தான் பாலிடெக்னிக்கில் சேர தகுதி எனக் கூறிய அவர், மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
பல்கலைகழங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் நியமனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு , துணை வேந்தர் நியமன கமிட்டி தான் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.
மேலும், மாநில பாடத்திட்டதில் படித்த மாணவர்களின் பத்தம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றவர்,
12 ஆம் வகுப்பு முடித்த சி.பி.எஸ்.சி மாணவர்கள் மதிப்பெண்கள் ஜூலை 31 அன்று தான் வெளியிடப்படும், சி.பி.எஸ்.சியில் படித்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் ஜூலை 31க்கு பின்னர் தான் மாணவர் சேர்க்கை துவங்கும் என்றார்.
உயர்நீதிமன்ற உத்தரவின் படி தனியார் கல்லூரிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும் என்றும் அதிக கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் விழுப்புறம் பல்கலைகழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை துவங்கப்படுமா என்ற கேள்விக்கு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இருப்பதால் வரும் காலத்தில் இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu