பணி நிரந்தரம்: முதல்வர், அமைச்சருக்கு திருக்கோயில் பணியாளர்கள் நன்றி

பணி நிரந்தரம்: முதல்வர், அமைச்சருக்கு திருக்கோயில் பணியாளர்கள் நன்றி
X

எழும்பூரில், திருக்கோயில் பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. 

திருக்கோயில் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்த முதல்வர் மற்றும் அமைச்சருக்கு, திருக்கோயில் பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னையில், திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின், எழும்பூர் கிளை துவக்க விழா, இன்று நடந்தது. இதில், மாநில காப்பாளர் தேவராசன், மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி, மாநில பொருளாளர் பக்கிரிசாமி, மாநில இணை பொதுச்செயலாளர் பாலசுந்தரம், சென்னை கோட்ட தலைவர் தனசேகர், சென்னை கோட்ட செயலாளர் தாம்பரம் இரா.இரமேஷ், சென்னை கோட்ட பொருளாளர் குகன், மற்றும் சென்னை கோட்ட திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், புதிய நிர்வாகிகளாக எழும்பூர் பகுதி கௌரவத் தலைவர் ராஜசேகர்,தலைவர் மனோகர் செயலாளர் ஜனார்த்தனம் பொருளாளர் கார்த்திக் உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், திருக்கோயில்களில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் சுமார் 1500 திருக்கோயில் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் , அமைச்சர் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை, C&D பணிப்பிரிவு பணியாளர்களுக்கு வழங்குவது போல் , ரூ.1000/-ல் இருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி, திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கக்கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story