ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு!

ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு!
X
மாணவர் சேர்க்கை பணி நடைபெறுவதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன் பிற ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வர வேண்டும்.

கொரோனா தொற்று குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கை விவரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பளளிக்கல்வி துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!