தடுப்பூசி போடாதது ஏன்? சான்றுடன் நிரூபிக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு

தடுப்பூசி போடாதது ஏன்? சான்றுடன் நிரூபிக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு
X

சென்னை போலீஸ் கமிஷனர்  சங்கர் ஜிவால்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது ஏன்? என்பதற்கான காரணத்தை சான்றுடன் நிரூபிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் இதுவரை 84 சதவிகிதம் போலீசார் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதை 100 சதவீதமாக உயர்த்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், கொரோனா தொற்றுக்கு இதுவரை 84 போலீசார் பலியாகி உள்ளனர். ஆகவே நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் சென்னையில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் இளம் வயதுடைய போலீசார் சிலர் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். உயர் அதிகாரிகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போலீசார் அதற்கான தகுந்த காரணத்திற்கான மருத்துவ சான்றிதழை உயரதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!