நீட் தொடர்பான பிரச்சனைக்கு திமுக நிச்சயம் நிரந்தர தீர்வு கொண்டு வரும் : கி. வீரமணி பேட்டி

நீட் தொடர்பான பிரச்சனைக்கு திமுக நிச்சயம் நிரந்தர தீர்வு கொண்டு வரும் : கி. வீரமணி பேட்டி
X

தி.க. தலைவர் கி. வீரமணி (பைல் படம்)

நீட் தொடர்பான பிரச்சனைகளுக்கு திமுக நிச்சயம் நிரந்தர தீர்வு கொண்டு வரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.

நீட் நுழைவு தேர்வுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், நீட் தேர்வை எதிர்க்கும் சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

சமூகநீதியாளர்களின் கலந்துரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தமான், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி., விசிக தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில துணை செயலாளர் மு. வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை சுப. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் சார்பில் பீமாரோவ், மதிமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமூக நீதி பேரவை சார்பில் சர்குணம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் 32 கட்சி மற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொருவரும் நீட் தொடர்பாக தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது :

திமுக நிச்சயம் நீட் தொடர்பான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரும். திமுக தலைமையில் நீட் தாக்கம் அமைத்த குழு செல்லாது என பாஜக எதிர்த்த வழக்கு தொடர்பாகவும்,

சட்டமன்றத்தில் ஒரு நிலைப்பாடு வெளியில் ஒரு நிலைப்பாடு என்பதை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றினோம். சாதாரண மக்கள் அல்லது அதற்கும் கீழுள்ளவர்கள் கூட மருத்துவர் ஆகிவிடுவர் என கூறி கொச்சைப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் தங்களை இந்த வழக்கில் இணைத்துக்கொண்டு வாதங்களை சட்டபூர்வமாக முன்னெடுக்க வேண்டும்.

நீட் தொடர்பான பிரச்சனைக்கு திமுக நிச்சயம் நிரந்தர தீர்வு கொண்டு வரும். மக்கள் நலன் காக்க உறுதியாக உள்ளோம். சட்ட போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும் தீவிரமாக முன்னுடுப்போம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story