கொரானோ விழிப்புணர்வு குறும்படம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

கொரானோ விழிப்புணர்வு குறும்படம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு
X

கொரானோ விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொரானோ விழிப்புணர்வு குறும்படத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாெற்றின் 2வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், ஏராளமானோர் உயிரிழந்தனர். பின்னர் குறையத்தொடங்கிய தொற்றால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தற்போது, 3 அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சுகாதாரத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொரானோ விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!