சென்னை சாலையோரம் பசியால் தவிப்பவர்கள் யாரும் இல்லை: பரந்தாமன் எம்எல்ஏ

சென்னை சாலையோரம் பசியால் தவிப்பவர்கள் யாரும் இல்லை: பரந்தாமன் எம்எல்ஏ
X

சென்னை புதுப்பேட்டையில் ஏழைகளுக்கு பரந்தாமன் எம்எல்ஏ மளிகை பொருட்கள் வழங்கிய காட்சி.

சென்னை சாலையோரங்களில் உள்ளவர்கள் பசியால் தவிக்கின்றனர் என்கிற நிலையை மாற்றியுள்ளோம் என்று எழும்பூர் தொகுதி எம்எல்ஏ பரந்தாமன் கூறினார்.

சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கொரோனா முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் புதுப்பேட்டை நரியங்காடு டிரான்ஸ்போர்ட் லைனில் உள்ள 500 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா முழு ஊரடங்கள் வாழ்வதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இன்று மாளிகை பொருட்கள், காய்கறி மற்றும் அரசி வழங்கியுள்ளோம். மேலும் கலைஞர் பிறந்தாளை முன்னிட்டு இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

சென்னை சாலையோரத்தில் பசியினால் உள்ளவர்கள் எங்கேயும் இல்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். எதாவது ஒன்று இரண்டு இருக்குமே என்றால் இந்த அரசு அதை கலைவதற்கு தயராக இருக்கிறது. எழும்பூர் தொகுதியில் சாலையோரம் உள்ள மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!