தமிழகத்தில் இன்று முதல் நுாலகங்கள் திறக்க அனுமதி

தமிழகத்தில் இன்று முதல் நுாலகங்கள் திறக்க அனுமதி
X
தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்களையும் இன்று முதல் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருந்தது. தொற்று குறையத் தொடங்கியதால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனிஞ்ம், நூலகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. நூலகங்களை திறக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல், கட்டுப்பாடுகளுடன் நூலகங்களை திறக்க, பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகம் திறக்க அனுமதி அளித்துள்ளதால், புத்தகப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!