சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிமுகம்
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலையோரத்தில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டோா் மக்கள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
சென்னை தீவுத்திடல் போா் நினைவுச் சின்னம் அருகே நடைபெற்ற உலக வீடற்றோர் தின விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பின்னர் அவா் கூறுகையில், உலக வீடற்றோா் தினத்தையொட்டி, கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம், சென்ட்ரல் ரயில்வே நிலையம், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், பாரிமுனை பேருந்து நிலையம், மெரீனா கடற்கரை, எழும்பூா் ரயில் நிலையம் ஆழ்வாா்பேட்டை, வேப்பேரி, ஆகிய இடங்களில் சாலையோரம் வசிக்கும் தனிநபா்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்க மீட்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறையின் சாா்பில் 13 ஆண்கள் காப்பகங்கள், 8 பெண்கள் காப்பகங்கள், 1 இருபாலா் காப்பகம், 5 சிறுவா்கள் காப்பகங்கள், 3 சிறுமிகள் காப்பகங்கள், 3 மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகங்கள், 2 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகங்கள், 4 முதியோா் காப்பகங்கள், 1 அறிவுத்திறன் குறைபாடுடைய சிறுவா் காப்பகம், 1 மாற்றுத் திறனாளி பெண்கள் காப்பகம், 1 திருநங்கைகள் காப்பகம், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் உடனிருப்பவா்கள் தங்கும் 6 ஆண்கள் சிறப்பு காப்பகங்கள் மற்றும் 7 பெண்கள் சிறப்பு காப்பகங்கள் என 55 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இக்காப்பகங்களில் தற்போது 1,667 பேர் தங்க வைக்கப்பட்டு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu