மாணவர்களுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

மாணவர்களுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
X

திருக்குறள் முற்றோதல் மாணவர்களுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருக்குறள் முற்றோதல் மாணவர்களுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில் " திருக்குறள் முற்றோதல் செய்து குறள் பரிசுக்கு தெரிவுச்செய்யப்பட்டு, பரிசு தொகை வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு பரிசுத்தொகை வழங்கப்படும் . அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பு நீக்கப்பட்டு உயர்த்தப்படும் " என பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது .

இவ்வறிவிப்பின்படி 1330 திருக்குறளின் முற்றோதல் செய்த மாணவர்கள் 219 பேருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் குறள் பரிசுத் தொகையும் , பாராட்டுச் சான்றிதழும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டது .

இந்த 219 பேரில் சென்னையை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்களுக்கும் , காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் குறள் பரிசுத் தொகையும் , பாராட்டுச் சான்றிதழையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.டாலின் வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்