எம் எல் ஏ வாக பதவியேற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்

எம் எல் ஏ வாக பதவியேற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
X
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். தற்காலிக அவைத் தலைவர் கு. பிச்சாண்டி முன்னிலையில் பதவியேற்பு உறுதி மொழியை வாசித்தார்.

பின்னர் தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டமுறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன் என்றும் கூறி மு.க. ஸ்டாலின் பதவியேற்று கொண்டார். பின்பு அமைச்சர்கள் மற்றம் எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்..


Tags

Next Story
ai in future agriculture