அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் தமிழகத்தில் ஏப்ரல்14ஆம் தேதி தடுப்பூசி திருவிழா தொடங்கப் பட உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இரண்டு வாரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் உணவகங்கள் மற்றும் இறைச்சி கூடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா