நீட் தேர்வு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று ஆலோசனை

X
நீட் தேர்வு (பைல் படம்)
By - C.Pandi, Reporter |28 Jun 2021 3:52 PM IST
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழு இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட இருக்கிறது.
சென்னை : நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழு இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட இருக்கிறது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 89,342 பேர் நீட் தேர்விற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கருத்துகளை இறுதி செய்வது குறித்து இன்று மாலை 3ம் கட்ட ஆலோசனையில் நீதிபதி ஏ.கே.ராஜனின் குழு ஈடுபடுகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu