ஒரு வழியா பதில் கிடைச்சாச்சு : பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி தேர்வு ரத்து செய்தாச்சுங்கோ..!
அரசு பள்ளி மாணவிகள் (மாதிரி படம் )
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் மாணவர்களின் நலன் கருதி தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளேன். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பின்னர் அறிவிப்புகள் வெளியாகும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்கு படிப்பதா? வேண்டாமா? என்ற குழப்ப நிலையில் இருந்த மாணவர்களுக்கு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மனரீதியாகவும் தேர்வுக்கு தயாராகவில்லை என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சம். என்னதான் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நேரடி வகுப்புகள், மாணவர்களின் நேரடி சந்திப்புகள், வகுப்பறை பகிர்வுகள் என்று மனதில் ஒரு உற்சாக நிலை இருந்திருக்கும். ஆனால், ஆன்லைன் வகுப்புகளால் அந்த இழப்புகள் மனதில் தேங்கி ஒருவித மன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அதனால், தேர்வு ரத்து என்பது மகிழ்ச்சியானதாகவே எடுத்துக் கொள்ளலாம். மதிப்பெண் வளங்குவதற்கு பதிலாக மாற்று வழிகளை அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழு யோசிக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu