7 பேர் விடுதலையில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்: பாரதிராஜா பேட்டி!

7 பேர் விடுதலையில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்: பாரதிராஜா பேட்டி!
X

இயக்குனர் பாரதிராஜா.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளதாக இயக்குனர் பாரதி ராஜா கூறினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று இயக்குனர் பாரதி ராஜா, சீமான் ஆகியோர் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினர்.

வெளியே வந்தபோது இயக்குனர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலையில் சிறை தண்டனை பெற்று வரும் 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக பேசி இருக்கிறோம். 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் பேசியுள்ளோம்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனேயே மக்களின் நிலை அறிந்து தமிழகத்தை தாங்கி நிற்கிறார். அவர் முதிர்ச்சியான அரசியல் தலைவராக செயல்பட்டு வருகிறார் என்றார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா