தடுப்பூசிக்கு பின் பாதிப்பு குறைவாக இருக்கும்: சுகாதாரத்துறை செயலர்

தடுப்பூசிக்கு பின் பாதிப்பு குறைவாக இருக்கும்: சுகாதாரத்துறை செயலர்
X
தடுப்பூசிக்கு பின் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள, விக்டோரியா கல்லூரியை கொரோனா வார்டாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி போட்ட பின் கொரோனா வந்தால் பாதிப்பு குறைவாக தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!