நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு - முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு - முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வை தொடக்கம் எதிர்கட்சியாக இருந்த திமுக பலமாக எதிர்த்து வந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அளித்திருந்தது.

இதன் தொடக்கமாக தற்போது தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதியரசர் ராஜன் தலைமையிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும்' என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil