மழைக்காலங்களில் வெள்ளநீர் வீணாவதைதடுக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு!

மழைக்காலங்களில் வெள்ளநீர் வீணாவதைதடுக்க  அமைச்சர் துரைமுருகன் உத்தரவு!
X

அமைச்ச்ர துரைமுருகன்

மழைக் காலங்களில் வெள்ள நீர் வீணாக கடலில் கடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதன் மூலம் தென் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், சில நேரங்களில் வடமாவட்டங்களிலும் மழைப்பொழிவு இருக்கும்.

இந்தநிலையில், சென்னையில் மழை காலங்களில் வெள்ள நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வெள்ள நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தடுப்பணைகளை அதிக அளவில் கட்ட வேண்டும். தேக்கப்படும் நீரை முறையாக விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை களஆய்வு நடத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா