எய்ம்ஸ் பணியை விரைவில் தொடங்க வேண்டும்- பிரதமருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

எய்ம்ஸ் பணியை விரைவில் தொடங்க வேண்டும்- பிரதமருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்
X
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பிரமர் மோடிக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு, சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்குப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா