கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி

கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி
X
கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் கூறினார்

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். இதில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லாத வகையில் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ நியமனங்களில் எந்த முறைகேடும் நடைபெறாது என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும்பலன் கிடைத்துள்ளது. தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!