களப் பணியாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் முதல்வர் உறுதி... ஓ.பன்னீர்செல்வம் நன்றி

களப் பணியாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் முதல்வர் உறுதி... ஓ.பன்னீர்செல்வம் நன்றி
X

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி களப் பணியாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர், அவர்களிடம் அறிக்கை வாயிலாக கேட்டிருந்தேன்.

இதனை அறிந்து முதலமைச்சர் அவர்கள், 'தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்' என்ற உத்திரவாதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் மூலமாக எனக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். இதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!