சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை சரிந்தது: சென்னை கமிஷனர் தகவல்
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்திருக்கும் ஆக்ஸிஜன் செறியூட்டிகள் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் ஆகியோர் பார்வையிட்டு திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, இன்று எழும்பூரில் திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் 104 படுக்கைகள் ஆக்ஸிஜசன் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கபட்டுள்ளது. மருத்துவ வசதி மற்றும் மருத்துவர்கள் செலவு, மேற்சிகிச்சைக்கு நோயாளிகளை அனுப்ப ஆம்புலன்ஸ், 7மருத்துவர்கள், 24 செவிலியர்கள், 24மணி நேரமும் செயல்படுவார்கள். இங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை செலவுகளை பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்.
சென்னையில் படுக்கை பற்றாக்குறையை குறைக்க லயோலா கல்லூரியிலும், ஈச்சம்பாக்கம் மற்றும் பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளோம். எங்கெல்லாம் பிரச்னைகள் கவனத்திற்கு வருகிறதோ ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்து வருகிறோம். இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவர்களின் பட்டியலை தயார் செய்து வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் நேற்று 20000 நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர் ஞாயிற்றுக்கிழமை இன்று 30 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறோம். சென்னையில் 40 சதவிகிதம் அளவுக்கு தான் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்றும் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன் வாருங்கள் என ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu