சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் கனரா வங்கி!

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் கனரா வங்கி!
X
சென்னை சிந்தாதிரிபேட்டையில் கனரா வங்கி சார்பில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் கனரா வங்கி உணவு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து உணவின்றி தவித்து வருவோருக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றன.

கனரா வங்கி நாடுமுழுவதும் கொரோனா தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உணவின்றி தவிப்போருக்கு மதிய உணவினை வழங்கி வருகிறது.

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை கனரா வங்கி கிளையில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கனரா வங்கி வடக்கு மண்டல அலுவலகம் துணை பொது மேலாளர் பிவி ராவ், துணை மேலாளர் ஆர்.பி. யமுனாலேகா, சிந்தாதிரிப்பேட்டை மேலாளர் அருண் ராஜா முன்னிலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரி யமுனா லேகா கூறுகையில், ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு கனரா வங்கியின் சார்பாக உணவுகளை வழங்கி வருகிறோம்.

விழிப்புணர்வு ஊட்டும் விதமாக அவர்களுக்கு முக கவசம் வழங்கி வருகிறோம்.கொரோனா காலத்தில் தொழிலை மேம்படுத்த சிறு குறு தொழில் செய்பவருக்கு வங்கியில் கடன் உதவி வழங்கி வருகிறோம் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வங்கி கடனை பெற்று தருகிறோம் என்றார்.

Tags

Next Story