/* */

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: குடியரசு தலைவருக்கு திமுக எம்பி கடிதம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: குடியரசு தலைவருக்கு திமுக எம்பி கடிதம்
X

உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஒரு சீரான முறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஐகோர்ட்டில் அதிக நீதிபதிகளை கொண்டிருந்தாலும் அந்த குறிப்பிட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.உதாரணமாக ஆந்திர ஐகோர்ட்டில் 37 நீதிபதிகள் மட்டுமே இருக்கக்கூடிய சூழலில் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். அதே நேரத்தில் சென்னை ஐகோர்ட்டில், 75 நீதிபதிகள் இருந்தும் ஒரே ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி மட்டுமே உள்ளார். எனவே விகிதாச்சார அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும்போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் நியமனங்கள் இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவது அத்தியாவசியமாகிறது, எனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும் போது சமூகநீதியை கடைபிடிக்கவும் மாநிலங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதை உறுதி செய்யவும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அந்த கடித்தில் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 20 Jun 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...