சென்னை:மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை:மத்திய அரசை கண்டித்து  நடந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கைது
X

சென்னை அண்ணாசாலை பகுதியில் மத்திய அரசுக்கு  எதிராக  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சியினர்

சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் திருமாவளவன் பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கைதாகினர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது.

சென்னை அண்ணாசாலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்தும் மோடி அரசை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் நடந்தது. முக்கியத் தலைவர்களாக திருமாவளவன் பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விவசாயம் விளங்குகிறது அந்த விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வையும் சீர்குலைக்கும் நோக்கோடு மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருதி பல லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 10 மாதங்களாக போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் மத்திய அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை .

அதுமட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது மற்றும் பொது துறைக்கான பங்குகளை விற்பது, வங்கிகளை இணைப்பது , காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு கொடுப்பது, ராணுவ தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன் ஆக மாற்றுவது , தொழிலாளர் சட்டங்களில் 4 தொகுப்புகளாக மாற்றம் செய்தது மற்றும் ரயில்வேயை தனியாருக்கு கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்புகளால் சிறு மற்றும் குறு நடுத்தர நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து மிகவும் சிரமப்படுகின்றனர் . வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற பிரதமர் அறிவித்த திட்டம் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

2014 ல் பெட்ரோல் மீதான கலால் வரி 9.40 ரூபாயாக இருந்தது. ஆனால் அதே பெட்ரோல் மீதான கலால் வரி 2021 ஆம் ஆண்டில் 32.98 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைத்தே தீர வேண்டும். அரச சொத்துக்களை தனியாருக்கு விற்கும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசின் மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..

தமிழகம் முழுவதும் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது .. அதில் ஒரு பகுதியாக சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் தலைமையிலான சாலை மறியல் போராட்டம் இங்கு நடைபெற்று வருகிறது தமிழக சட்டமன்றத்தில் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் . மேலும் வேளாண் சட்டங்களை திரும்பத் பெற மத்திய அரசு தாமதித்தால் போராட்டங்கள் தீவிரமாகும் என்று மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்;

மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று இன்று தேசம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது உடனடியாக 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல் விலையை பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மக்கள் நிறுவனத்திற்கு எதிரான கொள்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சிஐடிய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் என திமுக தலைமையிலான அமைப்புகளின் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

அவர்களைத் தொடர்ந்து தொமுச தொழிற்சங்க பொருளாளர் நடராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :

மோடி அரசின் விவசாய விரோத மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து இன்று திமுக கூட்டணியின் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது இந்திய நாட்டை கூறு போட்டு விற்கும் மோடி அரசு அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!