தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?  அமைச்சர் விளக்கம்
X
தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரானா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது. மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டு பள்ளிகளை திறக்க அவர்கள் அனுமதித்தால் முதல்வர் அதற்கு சம்மதம் தெரிவிப்பார்.

அப்படி நிகழும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!