சென்னையில் கோயம்பேடு போல் மற்றொரு காய்கறி சந்தையா ? -அமைச்சர் தகவல்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருவதாகவும், கோயம்பேட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக தகவல் வந்துள்ளதாக அவர் கூறிய நிலையில் அவரது உத்தரவின்பேரில் ஆய்வு செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பொருத்தவரை அதனை சுத்தமாக வைத்திருக்க கூடிய பணி மிகவும் சவாலானதாக இருப்பதாகவும் மேலும் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மிகப் பெரிய மார்க்கெட் பகுதி என்பதால் பல்வேறு தரப்பினரும் வந்து செல்லக்கூடிய பகுதி என்பதாலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிப்பு பணியை மேற்கொள்கிற பட்சத்தில் தொற்று பரவும் அபாயம் குறைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சேரும் காய்கறி கழிவுகளை இதனை ஒட்டிய பகுதியில் உள்ள இருக்ககூடிய கழகால்நடை வளர்ப்போரிடம் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மார்க்கெட் வளாகம் முழுவதும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் சென்னை கோயம்பேடு பகுதியில் மட்டுமே மொத்தமாக செய்வதை தடுக்கும் வகையில் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கோயம்பேடு காய்கறி சந்தை போல் அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் அது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூடுதல் விவரங்களை பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu