சென்னையில் இன்று முதல் தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் இன்று முதல் தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
X

சென்னையில் மீண்டும் தடுப்பூசி முகாம்கள் தொடங்கியது. (பைல் படம்)

சென்னையில் மூன்று நாட்களுக்கு பிறகு தடுப்பூசி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்றும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் தடுப்பூசி முகாம்கள் இன்று செயல்படும் என்றும் நேரடியாகச் சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் ஆன்லைனில் முன்பதிவு இல்லாமல் நேரடியாகவே சென்று செலுத்திக் கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!