தூத்துக்குடி துப்பாக்கிசூடு தினம்: முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தினம்: முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை
X

திருமாவளவன்

இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு தினம்: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 13பேருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்!

பலியான 13 குடும்பத்தினருக்கு தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அத்துடன் போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென்றும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!