தீயணைப்பு வீரர் பாதுகாப்பு ஆடைக்கு ஐஎஸ்ஐ தரச்சான்று
தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடை தயாரிப்பில், அகில இந்திய அளவில் முதல் ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
பி.ஐ.எஸ்., என்ற, இந்திய தர நிர்ணய அமைவனம், பொருட்களுக்கான தர உரிமம், மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலை பொருட்களுக்கான 'ஹால்மார்க்' உரிமம் உட்பட, ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடை தயாரிப்புக்கு, ஐ.எஸ்., 16890: 2018ன் படி, ஒரு தர நியமத்தை உருவாக்கி உள்ளது.
இதன்படி, ஐ.எஸ்.ஐ., தரத்திற்கேற்ப, தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடையை, 'சிஸ்டம் 5 எஸ்' என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கிய பாதுகாப்பு ஆடை, தீ விபத்துகள், அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை எதிர்த்து போராடுகிறது. வெப்பம் மற்றும் தீப்பிழம்புகள் போன்ற அபாயம் ஏற்படாத வகையிலும், உயிரைக் காக்கும் நோக்கிலும், இந்த உடை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும். ஐஎஸ்ஐ., 16890: 2018ன் படி, தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு உடை தயாரிப்பதற்கான அகில இந்திய முதல் உரிமம், 'சிஸ்டம் 5 எஸ்' என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை, தமிழக தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu