கோவேக்சின் செலுத்த 2 நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடு -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கோவேக்சின் செலுத்த 2 நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடு -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
X
கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை செயலர் சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இதுநாள்வரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும் 6,04,804 தடுப்பூசியும் என மொத்தம் 23,62,991 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை செலுத்த வேண்டிய காலத்தை கடந்து சுமார் 89,500 நபர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மாநகராட்சியின் சார்பில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்படாத நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களிலும் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன் வாயிலாக தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டவர்களில் இதுவரை 30,480 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் தற்போதைய நிலவரத்தின்படி சுமார் 59,000 நபர்கள் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டிய காலத்தை கடந்து தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

ஆகவே இவர்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ளாத நபர்களுக்கு 23/06/2021 மற்றும் 24/06/2021 ஆகிய நாட்களில் மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசிகள் அனைத்து தரப்பு சமூகங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும் பொதுமக்கள் தடுப்பூசி குறித்த தகவல்களை http//covid19.chennaicorporation.gov.in/covid/vaccine centers/ என்ற இணைய தளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். எனவே கோவேக்சின் முதல் தவணை செலுத்தி கொண்ட நபர்கள் 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!