விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு!

விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு!
X
விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தேமுதிக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்தல் முடிந்தவுடன் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலுக்கு வந்ததாலும் கூட்டம் சேர கூடாது என்பதாலும் ஆலோசனை கூட்டம் நடத்த முடியவில்லை.

எனவே ஊரடங்கு முடிந்ததும் விரைவில் அனைத்து மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். தேர்தலுக்கு முன்பு யார் யாரிடம் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுத்தது போல் தேர்தல் முடிந்த பின்னரும் அனைவரிடமும் கருத்து கேட்டு இனிவரும் காலங்களில் கட்சியை எப்படி வழி நடத்தி செல்ல வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசிக்க உள்ளோம்.

இது போன்ற நேரங்களில் கட்சி நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடையாமல் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவது, கட்சிக்கு களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். ஊரடங்கு முடிந்தவுடன் அல்லது தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றாவது விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த முயற்சி செய்து வருகிறோம். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Soon #DMDK #District #Secretaries #Meeting #HeadOffice #Announcement #விரைவில் #தேமுதிக #மாவட்டசெயலாளர்கள் #கூட்டம் #தலைமைகழகம் #அறிவிப்பு #tamilnadu #instanews #chennai

Tags

Next Story
ai in future agriculture