இன்றும், நாளையும் கோவாக்ஸின் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த அவகாசம்: சென்னை மாநகராட்சி

இன்றும், நாளையும்  கோவாக்ஸின் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த அவகாசம்: சென்னை மாநகராட்சி
X
கோவாக்ஸின் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள தவறியவர்கள், இன்றும், நாளையும் செலுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் மீண்டும் செலுத்திக் கொள்ள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு, மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவேக்சின் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 2 நாட்களில் மட்டும் 8880 நபர்கள் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.

தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள மேலும் இரண்டு நாட்கள் (25/06/2021 மற்றும் 26/06/2021) நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகவே முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த நபர்கள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயனடையுமாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!