தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது
X
தமிழகம் முழுவதும், 52 மணி நேரத்தில் 21,592 இடங்களில் நடந்த சோதனையில் 3325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, தென் மாவட்டங்களில் சில இடங்களில் அதிகளவில் கொலை சம்பவங்கள் அரங்கேறின. இதைத் தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், தமிழகம் முழுவதும், 52 மணி நேரத்தில் 21,592 இடங்களில் நடந்த சோதனையில், பழைய குற்றவாளிகள் 972 பேர் என 3325 ரவுடிகள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!