பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு : 13ம் தேதி துவக்கம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு : 13ம் தேதி துவக்கம்
X

பைல் படம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 13-ம் தேதி முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 25 தேதி முதல் ஜூலை 28-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு பெற்ற 3 கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இவர்களுக்கான தர வரிசை பட்டியல் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். சிறப்பு பிரிவான விளையாட்டு மாணவர்களுக்கு நாளை 12-ம் தேதி ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரி பார்க்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர 435 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 13-ம் தேதி முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்கள் கவுன்சிலிங் 24-ம் தேதி வரை விண்ணப்பித்த கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்தது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!