ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.
சென்னை அரும்பாக்கம் அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனையினை ஆய்வு மேற்கொண்ட அவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் சிறிது நேரம் யோகா பயிற்சியில் ஈடுபட்டு மருத்துவர்களைன் கைதட்டலை பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள் 11 ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் 2 யுனானி சிகிச்சை மையம் 1 ஹோமியோபதி சிகிச்சை மையம் என மொத்தம் 69 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
27250 பேர் 69 மையங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள கட்டளை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் ஊக்கப்படுத்துவது போல் பழமை வாய்ந்த சித்த மருத்துவத்தையும் மேம்படுத்தப்படும் என கூறினார்.
ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், தேர்தல் அறிக்கையில் கூறியது போல்தான் தென் சென்னையில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்படும். அதன் அடிப்படையில்தான் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சித்த மருத்துவ சிகிச்சைகள் குறித்த சந்தேகங்களை 73587 23063 என்ற எண்ணில் சித்த மருத்துவ கட்டளை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu