மேகதாது அணை விவகாரம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் பேட்டி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன் விசிக தலைவர் தொல் திருமாவளவன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி அளித்தார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக, அதிமுக உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்தித்து பேச உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அளித்த பேட்டி :-
கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டுவருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட இருக்கிறோம். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதலைமையில் இந்த குழு டெல்லிக்கு செல்கிறது.
நேற்று சில பேர் டெல்லிக்கு போய் சேர்ந்து இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நானும் அந்த குழுவில் இணைந்து ஒன்றிய அமைச்சரை சந்திக்க செல்கிறேன். பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார் என நம்புகிறோம்.
இந்த அணை கட்டப்படு மேயானால் தமிழ்நாடு எதிர்காலத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். எனவே கர்நாடக மாநில அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu