மது விற்பனையில் முறைகேடு: டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

மது  விற்பனையில் முறைகேடு: டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்
X
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக்' ஊழியர்கள் ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் ஏழு பேர் சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் நடத்தப்படும், சென்னை அண்ணா நகரில் உள்ள இரண்டு 'எலைட்' மதுபானக் கடையில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.

இதனையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 750 மில்லி மது பாட்டில்களை, கூடுதலாக ரூ.25 வரையில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என ஏழு பேர் சஸ்பெண்ட் செயப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future