சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும்,பார்ப்பதற்கும் தயார்- புகழேந்தி

சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும்,பார்ப்பதற்கும் தயார்- புகழேந்தி
X

புகழேந்தி.

சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் தயார் என முன்னாள் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிமுக.,விலிருந்து விலக்கப்பட்ட கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தொலைக்காட்சி விவாத நிகழ்சிகளில் பங்கேற்ற அப்பாவு தற்போது சபாநாயகராக பொறுபேற்றுள்ளார். அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்.

ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆகிய இருவரும் அதிமுக.,வை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றிக்கொள்ள டெல்லி தெருக்களில் அலைகிறார்கள் என்பது தான் உண்மை; கட்சியை காப்பாற்ற அல்ல.

மிகவும் மோசமான நிலையில் அதிமுக மீட்டெடுக்க முடியாமல் எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் உள்ளது. மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும்.

ஒ.பி.எஸ் - ஈபிஎஸ் ஆகியோர் தங்கள் அடிமை வாழ்வை தொடர டெல்லி வீதிகளில் சுற்றி வருகிறார்கள். சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் தயாராக இருக்கிறேன். சசிகலா அவர்களால் தான் இந்த காட்சியை காப்பாற்ற முடியும்.

ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆல் கட்சியை காப்பாற்ற முடியாது. இன்றைய தினம் திமுக இல்லை என்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது.

பெரியார் பெயர் வைத்து வளர்ந்தவன் என்றும் திராவிட இயக்க சிந்தனையில் என்னுடைய செயல்பாடு இருக்கும் விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!