முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்
X

பைல் படம்

வேலுமணியின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியுள்ளதாக தகவல்

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் வேலுமணி வீடு, அவரது சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட 60 இடங்களிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

வேலுமணிக்கு நெருங்கிய நண்பரான சந்திரபிரகாசுக்கு சொந்தமான கேசிபி என்ஜினீயர்ஸ் நிறுவனம், மதுக்கரை அடுத்த பாலத்துறையில் உள்ள சான்ட்குவாரியில் நேற்று 2- நாளாக சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை முடக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
why is ai important to the future