முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மாமனார் மரணம்

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மாமனார் மரணம்
X

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மாமனாரின் உடலுக்கு காங்கிஸ் எம்பி விஜய் வசந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மாமனார் தங்கராஜ் வயது முதிர்வின் காரணமாக சென்னையில் காலமானார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மாமனார் தங்கராஜ் (86) வயது முதிர்வின் காரணமாக சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் அவர்களது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் .

இதைப்போல் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் காமராஜ், வர்த்தக காங்கிரஸ் மாநில செயல் தலைவர் ராமசாமி, உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!