அண்ணா தொழிற்சங்க பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல், ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அறிவிப்பு
பைல் படம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா தொழிற்சங்க பேரவை, தமிழக அரசு போக்குவரத்து மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடக்க இருக்கிறது.
நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை மண்டலங்களுக்கு முதல் கட்டமாக வருகிற 14-தேதி தேர்தல் நடக்கிறது.
2- கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து மண்டல நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 22-தேதி தேர்தல் நடக்கிறது.
3- கட்டமாக சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், மதுரை, சேலம், கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், செங்கோட்டை, திருவனந்தபுரம், திண்டுக்கல், காரைக்குடி, ஓசூர், திருச்செந்தூர் ஆகிய அரசு விரைவு போக்குவரத்து மண்டல நிர்வாகிகள் மற்றும் பணிமனை நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 29-தேதி நடக்கிறது.
4- கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மண்டலங்களுக்கு செப்டம்பர் 7-தேதி தேர்தல் நடக்கிறது.
5- கட்டமாக சேலம், தர்மபுரி, கரூர், திண்டுக்கல் மண்டலங்களுக்கு செப்டம்பர் 17-தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த மண்டலத்தில் உள்ள அயனாவரம், பெரம்பூர், மத்திய பணிமனை, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், பேசின் பாலம், வியாசர்பாடி, மாதவரம், பாடிநல்லூர் பணிமனைகளுக்கு தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2- கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 16-தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை 18-தேதி நடக்கிறது.
அன்று மாலை 6 மணிக்குள் மனுக்களை திரும்பபெறலாம். இரவு 7 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. 22-தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை தேர்தல் நடக்கிறது. அன்று மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu