முழு ஊரடங்கு : தலைநகர் வெறிச்சோடியது-போலீசார் குவிப்பு,வாகனங்கள் பறிமுதல்

முழு ஊரடங்கு : தலைநகர் வெறிச்சோடியது-போலீசார் குவிப்பு,வாகனங்கள் பறிமுதல்
X

பரபரப்பாக காணப்படும் சென்னை சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தலைநகர் சென்னை வெறிச்சோடியது.

தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 320 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் மூடி, பிரதான சாலைகளில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அடையாள அட்டையை காண்பித்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

இதனால் பரபரப்பாக காணப்படும் சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது. இதுமட்டுமின்றி தேவையில்லாமல் வெளியே வந்தால் அபராதம் விதித்து வழக்குப்பதிவும் செய்யப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!