கொரோனா பரவல் எதிரொலி : சென்னையில் 4,416 ஆக உயர்வு

கொரோனா பரவல் எதிரொலி : சென்னையில்  4,416 ஆக உயர்வு
X
சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டிய நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி இது 4,416 ஆக உயர்ந்துள்ளது. இதில் தேனாம்பேட்டை 560 நோயாளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இதுக்கும் சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில் இராயபுரம், திரு.விக.நகர், அம்பத்தூர் மண்டலங்களிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாகக் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,44,686 ஆக உள்ளது. இவர்களில் 2,36,048 பேர் குணமடைந்துவிட்டனர். 4,222 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். தற்போது 4,416 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 560 பேரும், கோடம்பாக்கத்தில் 495 பேரும், அண்ணாநகரில் 479 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!