தேனாம்பேட்டையில் கொரோனா உச்சக்கட்டம்..!பொதுமக்கள் உஷார்
சென்னையில் கொரோனா ருத்ர தாண்டவம் எடுத்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 2,920 ஆக உயர்ந்து உள்ளது. இங்குதான் அதிகபட்சமாக 546 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,55,960 ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் வீடு மற்றும் மருத்துவமனைகளில் ஒட்டுமொத்தமாக 26,194 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 9% ஆகும். இதுவரை சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,415 ஆக உள்ளது. தேனாம்பேட்டையைத் தொடர்ந்து அண்ணாநகரில் 2,840 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 15 மண்டலங்களில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu