/* */

சென்னை மதுரவாயல்: கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது!

சென்னை மதுரவாயலில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை மதுரவாயல்: கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது!
X

கஞ்சா, கோப்பு படம்

சென்னை நெற்குன்றம் செந்தமிழ் நகர் பகுதியில் இன்று காலை இரு சிறுவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற போலீசார், அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை மடக்கிப் பிடித்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒருவர் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (வயது 19) என தெரியவந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு இவர்கள் கஞ்சாவை கொண்டு வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் போலீசார் அவர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவையும் 2 செல்போன்கள் மற்றும் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Jun 2021 8:47 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!
 2. தேனி
  உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி எது?
 3. செங்கம்
  செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!
 4. நாமக்கல்
  அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்!
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 6. கோவை மாநகர்
  மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
 7. வீடியோ
  🔴 LIVE : அந்த நடிகர் யாருன்னே தெரியாது! எல் முருகன் பத்திரிக்கையாளர்...
 8. திருவண்ணாமலை
  ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்: கூடுதல் ரயில்கள் இயக்க பக்தர்கள்...
 9. உலகம்
  வங்கதேச விடுதலை: ஹிட்லரால் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத...
 10. வீடியோ
  NIA அலுவலகத்திற்கு வந்த போன் கால்! | தீவிரமாகும் புலன் விசாரனை...