/* */

கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக நடைபெறுகின்றதா என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை கோயம்பேட்டில் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. மதியம் 12 மணிவரை வியாபாரிகள், தொழிலாளிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு வணிக வளாகம் செயல்படும். முகக்கவசம் அணியாமலும், கூட்டம் அதிகமாக சேரும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jun 2021 8:59 AM GMT

Related News