சென்னை: யோகா செய்து அசத்திய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை: யோகா செய்து அசத்திய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
X

அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா செய்த காட்சி.

சென்னை அரும்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சிறந்த அத்லட்டிக் வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யக்கூடியவர்.

இந்தநிலையில், சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான கட்டளை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் மருத்துவமனையை ஆய்வு செய்த அவர், மருத்துவமனையில் உள்ள இயற்கை சிகிச்சை பிரிவு மையத்தில் திடீரென்று யோகா செய்து காட்டினார். பல்வேறு யோகாசனங்களை அவர் செய்ததை கூடியிருந்த பலரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மருத்துவர்கள் அனைவரும் கைத்தட்டி அமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!