சென்னை அண்ணாநகர் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

சென்னை அண்ணாநகர் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!
X

அமைச்சர் சேகர் பாபு

சென்னை அண்ணாநகர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை அண்ணாநகரில் அரசு புறநகர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல முயற்சிகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!